Enable Javscript for better performance
குற்றாலம் சீசன் காலத்தில் மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு கூடுதல் சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    குற்றாலம் சீசன் காலத்தில் மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு கூடுதல் சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

    By விருதுநகர்  |   Published on : 02nd June 2016 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குற்றாலம் சீசன் காலத்தில் மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு கூடுதல் சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

       குற்றால சீசன் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரை இருக்கும். குற்றாலத்துக்கு மதுரையில் இருந்து திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக செங்கோட்டை செல்லும் பேருந்தில் சென்றால் 5 மணி நேரத்தில் குற்றலாம் சென்றடையலாம். ஆனால், மதுரையில் இருந்து சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை வரை தினந்தோறும் இரு மார்க்கங்களில் 3 முறை மட்டுமே பயணிகள் ரயிலிலும், பொதிகை விரைவு ரயிலிலும் பயணம் செய்தால் மதுரையில் இருந்து தென்காசி வரை செல்ல 3.30 மணி நேரமே ஆகிறது.

     ரயில் கட்டணத்தை விட பேருந்து கட்டணம் பல மடங்கு அதிகமாகும். எனவே, ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் குற்றலாம் செல்ல ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.   சாதாரண நாள்களில் செங்கோட்டை செல்லும் ரயில்களில் அதிக அளவில் கூட்டம் நிரம்பி வழியும். குற்றால சீசனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளிலுருந்தும் ரயில் மூலம் பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இதனால் ரயில்களில் மேலும் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

      பொது மக்கள் மற்றும் பயணிகள், ஆண்டுதோறும் குற்றாலத்திற்கு செல்ல வசதியாக செங்கோட்டை வரை செல்ல சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது, திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வரை டெமோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயிலை இரவு நேரத்தில் செங்கோட்டை வரை இயக்கினால் பயணிகளும் பயன் பெறுவர்.    மேலும், ஏற்கனவே இயங்கி வந்த கோவை-செங்கோட்டை பயணிகளை ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். மானாமதுரை வரை வந்து செல்லும், சிலம்பு விரைவு ரயிலையும் மீண்டும் செங்கோட்டை வரை இயக்க வேண்டும்.

      சென்னையில் இருந்த செங்கோட்டைக்கு கூடுதல் ரயில்களை இயக்கினால் கூடுதல் வருவாய் கிடைக்கும்.  குற்றால சீசன் முடியும் வரையிலாவது, மதுரை-செங்கோட்டை பயணிகளை ரயிலை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai