சுடச்சுட

    

    சாத்தூர் அருகே சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரகேடு: பொதுமக்கள் அவதி

    By சாத்தூர்  |   Published on : 02nd June 2016 04:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் சாலை ஓரத்தில் கொட்டபட்டுள்ள குப்பைகளால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

       விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குள்பட்ட, ஏழாயிரம்பண்ணை பஞ்சாயத்து, ஏழாயிரம்பண்ணையில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

     ஏழாயிரம்பண்ணை, பழைய ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதியில் சேகரிக்கப்படும்  குப்பைகளை பஞ்சாயத்து நிர்வாகம் எடுத்து ரெட்டியபட்டி கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை ஓரத்தில் கொட்டி வைத்துள்ளனர். மேலும், இங்கு குப்பைகளுடன் சேர்த்து மாமிச கழிவுகளும் கொட்டப்படுவதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அவ்வழியே செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகின்றனர்.

      இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

     ஆகவே, குப்பைகளை கொட்டுவதற்கு ஊருக்கு வெளியே இடத்தை தேர்வு செய்து அங்கு கொட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

      இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai