சுடச்சுட

  

  பெண் உயிரிழப்புக்கு விசாரணை நடத்த தாமதம் சிவகாசி உதவி ஆட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை

  By சிவகாசி  |   Published on : 02nd June 2016 04:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெண் இறப்பு குறித்து விசாரணை நடத்த தாமதமானதையடுத்து உறவினர்கள் சிவகாசி உதவி ஆட்சியர் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

    ராஜபாளையம் வட்டம் முகவூரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஆனந்தகுரு(22) என்பவருக்கும் கடந்த 10 தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி,அனந்தகுரு, ஸ்டவ் வெடித்ததில் பலத்த தீக்காயமடைந்தார். இதையடுத்து அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

  பின்னர் அவரது உறவினர்கள் முகவூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கிருந்து காலை 11.30 மணியளவில் வந்த போலீஸார், சாத்தூர் சென்று வருவாய் கோட்டாட்சியரிடம் கையெழுத்து வாங்கி வருகிறோம் எனக்கூறிச் சென்றனர். வெகுநேரமாகியும் போலீஸார் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சிவகாசி உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

   இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சிவகாசி உதவி ஆட்சியர் அமர்குஷ்வாஹா விசாரணை மேற்கொள்வார் எனக் கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். அதைதொடர்ந்து உதவி ஆட்சியரின் விசாரணைக்கு பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு,சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai