சுடச்சுட

  

  பொறியியல் மாணவியை பலாத்காரம் செய்த இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை: ரூ. 1.20 லட்சம் அபராதம்

  By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 02nd June 2016 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பொறியியல் மாணவியை பலாத்காரம் செய்த இரு இளைஞர்களுக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.1.20 லட்சம் அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.

    மதுரை மாவட்டம், திருமங்கலம் பாண்டியன்நகரைச் சேர்ந்த 18 வயது பெண் காரியாபட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். தனது எதிர் வீட்டில் வசிக்கும் பாண்டியன் மகன் மாணிக்கராஜ் (20) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

  இந்நிலையில், கடந்த 26.9.2009இல்  மாணிக்கராஜும் அப்பெண்ணும் அருப்புக்கோட்டை புறவழிச் சாலை ரயில்வே பாதை அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.   அப்போது, அங்குவந்த அருப்புக்கோட்டை ஆத்திபட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் லக்கன் (எ) பாலகிருஷ்ணன் (24), முனியாண்டி மகன் அடைக்கலம் (எ) கத்தாளை (24) இருவரும் பெண்ணை மிரட்டி அவரிடமிருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலி, அரை பவுன் தோடு ஆகியவற்றை பறித்துள்ளனர். மேலும், காதலர்கள் இருவரையும் தனிஇடத்திற்கு அழைத்துச் சென்று மாணிக்கராஜ் கண்ணெதிரே அப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

    இது குறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலகிருஷ்ணன், கத்தாளை இருவரையும் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.   வழக்கை விசாரித்த அமர்வு நீதிபதி என்.ராஜலட்சுமி, குற்றவாளிகள் இருவருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 394 பிரிவின் கீழ் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், 376 (ஈ) பிரிவின் இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும், அபராதத் தொகை ரூ.1.20 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை நலனுக்காக தகுந்த ஆவணங்களின் பேரில் கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai