Enable Javscript for better performance
மேல்நிலை கல்வி பயில உதவி தொகை: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மேல்நிலை கல்வி பயில கல்வி உதவி தொகை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தலா மூன்று மாணவ, மாணவிகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தலா 2 மாணவ, மாணவியர் என மொத்தம் 10 மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் விரும்பும் தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு சேர்ந்து படிக்க அரசு கல்வி உதவி தொகை வழங்குகிறது.

    கல்வி கட்டணம் ரூ.8,000, பாரமரிப்பு கட்டணம் ரூ.3,650, விடுதி கட்டணம் ரூ.15,000, சிறப்பு பயிற்சி கட்டணம் ரூ.1,500 என மொத்தம் ரூ. 28,150 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உதவி பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தகுதியுடைய மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai