Enable Javscript for better performance
ரேஷன் பொருள்கள் அளவு குறைப்பு: பொதுமக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    ரேஷன் பொருள்கள் அளவு குறைப்பு: பொதுமக்கள் அவதி

    By ராஜபாளையம்  |   Published on : 02nd June 2016 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜபாளையத்தில் ரேஷன் பொருள்களின் அளவு குறைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.

    ராஜபாளையம், சேத்தூர், செட்டியார்பட்டி, சத்திரப்பட்டியில் உள்ள நியாய விலைக் கடைகளில் உளுந்து, துவரம்பருப்பு, பாமாயில் அளவு குறைக்கப்பட்டு வழங்குவதால் பொதுமக்கள் வெளிச்சந்தையில் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    மேலும், வெளிச் சந்தையில் பருப்பு, எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்ததை தொடர்ந்து உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, பாமாயில் கடந்த 2008முதல் ரூ.30க்கு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே,கார்டுக்கு ஒன்றுக்கு மாதம் ஒருகிலோ வீதம் வழங்கப்பட்ட உளுந்து, துவரம்பருப்பு வகைகள் கடந்த பல மாதங்களாக அரை கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளிச்சந்தைகளில் கூடுதல் விலைக்கு வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே, நியாயவிலைக் கடைகளில் உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு வகைகளை மாதத்துக்கு ஒரு கிலோ வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai