சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூரில் 9,800 மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்கும் விழா

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 02nd June 2016 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 9,800 மாணவர்களுக்கு புதன்கிழமை அரசின் விலையில்லால பாடப் புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    இவ்விழா நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

     உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செ.பாலமுருகன் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா வரவேற்றார்.

      ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 123 பள்ளிமாணவர்களுக்கு அரசின் விலையில்லா புத்தகம், சீருடை உள்ளிட்டவற்றை சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா வழங்கினார்.

      விழாவில் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, கூட்டுறவு நகர வங்கித் தலைவர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், நிலவங்கித் தலைவர் வி.டி.முத்துராஜ், மாவட்ட கவுன்சிலர் த.முத்தையா, ஒன்றியக் குழு உறுப்பினர் சிந்து முருகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.  

    நிகழ்ச்சியில் கிராம கல்விக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆசிரியை பா.பாத்திமா ஞானம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai