15 ஆண்டுகளுக்கு பிறகு ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி தீவிரம்
By ராஜபாளையம் | Published on : 02nd June 2016 04:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ராஜபாளையத்தில் கடந்த 2000ஆம் ஆண்டில் திமுக எம்எல்ஏ கட்டிய அலுவலகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ராஜபாளையம் தாலுகா அலுவலகம் அருகில் பெரியமந்தை பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு அப்போதைய திமுக எம்எல்ஏ வி.பி.ராஜன் தனது அலுவலகத்தை கட்டினார். திறக்கப்படும் முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த அலுவலகத்தை 2001இல் இருந்த அதிமுக எம்எல்ஏ ராஜசேகரும், 2006ல் வந்த அதிமுக எம்எல்ஏ சந்திராவும், 2011ல் வந்த அதிமுக எம்எல்ஏ கோபால்சாமியும் இந்த அலுவலகத்தை பயன்படுத்தவில்லை. கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாத நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக பாழடைந்து காணப்பட்டது.
இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் இத் தொகுதியை மீண்டும் திமுக கைப்பற்றியதை அடுத்து, சட்டப்பேரவை உறுப்பினர் தங்கப்பாண்டியன் இந்த அலுவலகத்தை புதுப்பித்து தருமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கூறினார். இதையடுத்து, அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்த கட்டடத்தை புதுப்பித்து, ராஜபாளையம் புதிய பேருந்துநிலையத்தில் இருந்து திருவள்ளுவர்நகர், சமத்துவபுரம், தென்றல்நகர், எம்எல்ஏஅலுவலகம், பஞ்சுமார்க்கெட், மலையடிப்பட்டி, சத்திரப்பட்டிரோடு, ரயில்நிலையம் வழியாக பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.