சுடச்சுட

    

    அனுமதியின்றி பட்டாசு திரிகள் தயாரித்த 2 பேர் கைது

    By விருதுநகர்  |   Published on : 03rd June 2016 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் அருகே சட்ட விரோதமாக பட்டாசு கருந்திரி, வெள்ளைத்திரி, வெடி பொருள்கள் தயாரித்ததாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

     விருதுநகர் அருகே உள்ள சின்னவாடியில், பொன்குமார் என்பவருக்கு செந்தமான தனியார் பட்டாசு ஆலை உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற இந்த ஆலையில் அனுமதியின்றி கருந்திரி, வெள்ளைத்திரி மற்றும் பெரிய ரக பட்டாசுகள் தயாரித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை வச்சகாரப்பட்டி காவல் ஆய்வாளர் அண்ணாத்துரை தலைமையிலான போலீஸார், அங்கு சோதனை நடத்தியதில், 1400 குரோஸ் வெள்ளைத்திரி, 3000 குரோஸ் கருந்திரி மற்றும் 350 அட்டைப் பெட்டிகளில் பெரிய ரக வெடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆலை உரிமையாளர் பொன்குமார் மற்றும் கணக்காளர் கணேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai