சுடச்சுட

  

  அரசுப் பள்ளி ஆசிரியர்களை மாற்றக் கோரி போராட்டம்

  By விருதுநகர்  |   Published on : 03rd June 2016 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் அருகே அடிக்கடி விடுப்பு எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக் கோரி வியாழக்கிழமை பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தினர். 

   விருதுநகரை அடுத்த ராமக்குடும்பன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 30 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், கடந்த ஆண்டு அடிக்கடி விடுப்பு எடுத்ததாகவும், இதனால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டதாகவும் பெற்றோர் புகார் தெரிவித்து வந்தனர்.

   இந்நிலையில், பள்ளி திறந்த இரண்டாவது நாளான வியாழக்கிழமை மாணவ, மாணவிகளை வெளியே அழைத்து வந்து பெற்றோர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ஆசிரியர்கள் இருவரையும் இடமாற்றம் செய்து விட்டு, புதிய ஆசிரியர்களை நியமனம் செய்தால் தான் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என தெரிவித்தனர். தகவல் அறிந்த உதவித் தொடக்க கல்வி அலுவலர் ராமலட்சுமி அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai