சுடச்சுட

    

    ராஜபாளையத்தில் வியாழக்கிழமை ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து பெண் உயிரிழந்தார்.

     ராஜபாளையம் சோவையாபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி பரலோகம் (70). இவரது மகள் நெல்ரோஸ். இவர்கள் இருவரும் காட்டு வேலைக்கு சென்று விட்டு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். முடங்கியார் சாலையில் நாய் குறுக்கே வந்ததால் ஓட்டுநர் அரசமணி ஆட்டோவை ஒதுக்க முயன்ற போது பள்ளத்தில் கவிழ்ந்தது.

     இதில் பரலோகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மகள் நெல்ரோஸ் பலத்த காயத்துடன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆட்டோவில் வந்த மற்ற 4 பேர் சிறுகாயங்களுடன் தப்பினர்.

     ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai