சுடச்சுட

    

    சிவகாசியில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் புதன்கிழமை ஒருவரை தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

     சிவகாசி ரிசர்வ் லயன் பாரதி நகரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். உசேன் காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (40). இவர் பி.கே.என். சாலையில் இரு சக்கர வாகன உதிரிப்பாகங்கள் கடை வைத்துள்ளார். இந்நிலையில், ராஜமாணிக்கத்திடம், வெங்கடேஷ் ரூ.4.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை வெங்கடேஷால் திருப்பித் தர இயல வில்லை. இதையடுத்து வாரம் ரூ.500 கொடுக்க வெங்கடேஷ் ஒப்புக் கொண்டாராம். இந்நிலையில், 6ஆவது வாரத்துக்குரிய பணத்தை ராஜமாணிக்கம் மகன் சுதாகர் (37) வாங்க வெங்கடேஷ் கடைக்கு சென்றுள்ளார். அங்கு, வெங்கடேஷின் நண்பர் கோவில்பட்டி அரவிந்தகுமாரும் (35) கடையில் இருந்துள்ளார். அப்போது பணம் தர வெங்கடேஷ் மறுத்ததையடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். இதில் வெங்கடேஷ் மற்றும் அரவிந்தகுமார் ஆகியோர் சுதாகரை இரும்புக் கம்பியால் தாக்கினராம்.

     இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து, அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai