சுடச்சுட

  

  காரியாபட்டி அருகே மோதல்: திமுகவினர் 6 பேருக்கு அரிவாள் வெட்டு

  By விருதுநகர்  |   Published on : 03rd June 2016 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் காரணமாக வியாழக்கிழமை ஏற்பட்ட மோதலில் திமுகவினர் 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

   காரியாபட்டி அருகே மாந்தேப்பு கிராமத்தில் ஊராட்சித் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சரவணன் (40) உள்ளார். இதே கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் என்பவருக்கும் சரவணனுக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கடந்த 2006 முதல் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், பூமிநாதன், 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து, பூமிநாதனின் மகன் குருமூர்த்தி (28) திமுக மேற்கு ஒன்றிய பொருளாளராக பதவி வகித்து வருகிறார்.

   இன்னும் ஒரு சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், புதன்கிழமை இரவு நடைபெற்ற அங்காளேஸ்வரி அம்மன் கோயில் பொங்கல் விழாவின் போது குருமூர்த்தி தரப்பைச் சேர்ந்த மாயா என்பவர் ஆடிச் சென்றாராம்.

   இதில் ஆத்திரமடைந்த சரவணன் தரப்பினர், மாயாவை தாக்கியுள்ளனர். இதையடுத்து, வியாழக்கிழமை குருமூர்த்தி கோஷ்டியினர், சரவணனிடம் சென்று தகராறு செய்தனராம். அப்போது ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதில், குருமூர்த்தி (28), கணேசன் (50) அவரது மகன்கள் அக்னி (28), முத்துப்பாண்டி (26), மாரிச்சாமி (30), வேலு (19) ஆகியோர் காயமடைந்தனர்.

   இதில் பலத்த காயமடைந்த குருமூர்த்தி மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 5 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

   சம்பவம் பற்றி அறிந்ததும், அருப்புக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் மாந்தோப்பு கிராமத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai