சுடச்சுட

    

    விருதுநகர் அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்க பயன்படும் கருந்திரி கடத்தியதாக 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

     விருதுநகர் சூலக்கரை போலீஸார் புளியங்குளம் பகுதியில் வியாழக்கிழமை திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிளை மறித்து  சோதனையிட்ட போது அட்டைப் பெட்டியில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட  250 குரோஸ் கருந்திரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றை ஊத்தாங்கால் நீரோடையில் அழித்த போலீஸார், கருந்திரி கடத்திய சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (52), சண்முகம் (65) ஆகியோரை கைது செய்தனர். அதேபோல், 400 குரோஸ் கருந்திரிகளை கடத்தியதாக சிவகாசியைச் சேர்ந்த மணிகண்டன் (35) என்பவரை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai