சுடச்சுட

  

  பட்டாசு ஆலை மேலாளர் கொலை வழக்கு: துப்பு துலக்க முடியாமல் போலீஸார் திணறல்

  By சிவகாசி  |   Published on : 03rd June 2016 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகாசி அருகே பட்டாசு ஆலை மேலாளர் கொலை வழக்கில் துப்புதுலக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

   சிவகாசி அருகே நதிக்குடி வி.பி.எம்.நகரைச் சேர்ந்த அய்யனார் மகன் ராஜூ (46).இவர் சிவகாசி அருகே உள்ள கொங்கன்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் 9.4.2016 அன்று சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கலையொட்டி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக, சிவகாசியில் உள்ள பட்டாசு அலுவலகத்திலிருந்து ரூ.15 லட்சத்தை பெற்றுக் கொண்டு, பைக்கில் கொங்கன்குளம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, திருவேங்கிடபுரம் ஓடைப் பகுதியில் சிலர் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு ரூ.15 லட்சத்துடன் தப்பி ஓடி விட்டனர்.

   இது குறித்து மாரனேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.  மேலும், சிவகாசி நகர் காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையில் கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்து 2 மாதங்களாகியும் இதுவரை எவ்வித துப்பும் துலங்கவில்லை. கொலை நடந்தது ஓடைப் பகுதியாக இருப்பதால் சம்பவத்தை யாரும் நேரில் பார்க்க வில்லை. எனவே குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் நீடிப்பதாக போலீஸார் கூறுகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காட்டுபவர்களுக்கோ, அவர்களது இருப்பிடம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கோ, ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என போலீஸார் கிராமங்களில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்துள்ளர். எனினும் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

   இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: இங்குள்ள காவல் நிலையங்களில் போதுமான போலீஸார் இல்லை. இது போன்ற வழக்குகளில் விசாரணைக்காக போலீஸார் தனியாக நியக்கப்பட்டால் மட்டுமே துப்புதுலக்க முடியும். அத்துடன் இதற்காக தனியே நியமிக்கப்படும் போலீஸார் 2 நாள்கள் இந்த வழக்குக்காக வேலை பார்த்தால் மூன்றாவது நாள் வேறு ஏதாவது வேலைக்கு செல்ல உயரதிகாரிகள் அவர்களுக்கு உத்தரவிட்டு விடுகிறார்கள். எனவே புலன் விசாரணையில் தடை ஏற்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் கூறின.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai