Enable Javscript for better performance
பைக் மோதி காயமடைந்த தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசியில் பைக் மோதி காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.

    சிவகாசி- சாட்சியாபுரத்தில் உள்ள இனிப்பு பலகாரங்கள் தயாரிக்கும் கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் விஸ்வநத்தம் குருசாமி (50). இவர் மே 30 ஆம் தேதி சிவகாசியிலிந்து சாட்சியாபுரத்துக்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அய்யப்பன் கோயிலருகே எதிரே வந்த பைக் இவர் மீது மோதியது.

      இதில் பலத்த காயமடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு புதன்கிழமை மதுரை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இதுகுறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டி வந்த சேதுராமன் (26) என்பவரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai