சுடச்சுட

  

  விருதுநகரில் மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற கணவரை, போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

   விருதுநகர் புல்லலக்கோட்டை சாலை தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் பிரேமசுந்தரி (31). மகளிர் குழு தலைவியான இவர், கணவர் உதயகுமாருடன் ஏறபட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 2ஆவது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், உதயகுமார் புதன்கிழமை நள்ளிரவு பிரேமசுந்தரி வீட்டுக்கு சென்றார். அங்கு இருவருக்கும் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதாம். அப்போது உதயகுமார், மண்ணெண்ணெயை பிரேமசுந்தரி மீது ஊற்றி தீ வைத்தாராம். இதில், தீக்காயமடைந்த பிரேமசுந்தரி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

  இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் உதயகுமாரை விருதுநகர் மேற்கு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai