சுடச்சுட

    

    ராஜபாளையம் நகராட்சியில் ரூ.180 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டப் பணிகள்: நகர்மன்றத் தலைவர் தகவல்

    By ராஜபாளையம்  |   Published on : 03rd June 2016 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜபாளையம் நகராட்சியில் ரூ.180 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டப் பணிகளை தொடங்க தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளதாக நகர்மன்றத் தலைவர் பி.எஸ்.தனலட்சுமி செல்வசுப்பிரமணியராஜா வியாழக்கிழமை தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியதாவது:

     ராஜபாளையம் நகராட்சியில் வறட்சிக் காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது. தற்போது இத்திட்டத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ரூ.90.03 கோடியும், மாநில அரசு ரூ.36.01 கோடியும் வழங்குகின்றன. மீதித் தொகை ரூ.54.01 கோடியை நகராட்சி வழங்கும். நகராட்சி நிதியை, தமிழ்நாடு நகர்ப்புற அடிப்படை வசதி மேம்பாட்டு நிதி நிறுவனம் மூலம் நீண்ட கால கடனாக பெற நகர்மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

     தற்போது ராஜபாளையம் நகர் பகுதியில் 8 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வசதி உள்ளது. இந்த புதிய தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் மேலும் 8 மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைத்து 10 ஆயிரம் வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றார். உடன் விருதுநகர் மாவட்ட ஜெ. பேரவைச் செயலர் பி.பி.செல்வசுப்பிரமணியராஜா இருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai