Enable Javscript for better performance
ராஜபாளையம் நகர திமுக சார்பில் கருணாநிதி பிறந்த நாள்- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் நகர திமுக சார்பில் கருணாநிதி பிறந்த நாள்

    By ராஜபாளையம்  |   Published on : 03rd June 2016 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜபாளையம் நகர திமுக சார்பில் 12, 13ஆவது வார்டுகளில் திமுக தலைவர் கருணாநிதியின் 93வது பிறந்தநாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

     ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன் தலைமையில், நகரச் செயலர் ராமமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் கட்சி கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிகளை பார்வையிட்டு, விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

     உடன் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் உதயசூரியன், நகர இளைஞரணி, மாணவரணி, மகளிரணி நிர்வாகிகள் சென்றிருந்தனர்.

    தங்கப்பாண்டியன் எம்எல்ஏ கூறும் போது, இந்த எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கப்பட்டதும், திறந்து வைக்கப்படும். இந்த அலுவலகத்தில் பொதுமக்கள்  எப்போதும் என்னை சந்தித்து மனு கொடுக்கலாம். அந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai