சுடச்சுட

    

    ராஜபாளையம் அருகே புதன்கிழமை ஸ்டவ் வெடித்து புதுப்பெண் உயிரிழந்தார்.

     ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சேர்ந்த சரவணனுக்கும், சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஆனந்தகுரு (28) என்பவருக்கும் மே 16ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. முகவூரில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர்கள், புதன்கிழமை இங்குள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அப்போது மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் ஆனந்தகுரு காபி போட்ட போது அது வெடித்து தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவர், ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அன்று இரவு உயிரிழந்தார்.

    இதுகுறித்து தளவாய்புரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் கோட்டாட்சியர் விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai