சுடச்சுட

    

    இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் சாவு

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 04th June 2016 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர், மாயாண்டிபட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் கோவிந்தராஜ் (33). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் மடவார் வளாகம் நுழைவாயில் அருகே வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தார்.

       அப்போது எதிரே வந்த சைக்கிளில் மோதி விடாமல் இருக்க திடீரென பிரேக் போட்டுள்ளார்.   அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த கோவிந்தராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai