சுடச்சுட

    

    ராஜபாளையத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் 93ஆவது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

     ராஜபாளையம் நகரச் செயலர் ராமமூர்த்தி தலைமையில், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் உதயசூரியன், திமுக நிர்வாகிகள் தனுஷ்குமார், ராசா அருண்மொழி முன்னிலையில், பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பும், மதியஉணவும் வழங்கப்பட்டது. அதே போல், பழைய பேருந்து நிலையத்தில் மகளிர் அணி சார்பில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    சாத்தூரில்:  சாத்தூர் முக்குராந்தல் பகுதியில், திமுக நகரச் செயலர் குருசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஒன்றியச் செயலர் முருகேசன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai