Enable Javscript for better performance
பள்ளியை விட்டு வெளியேறிய சிறுமி மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பள்ளியை விட்டு வெளியேறிய மாணவியை மீட்டு போலீஸார், அவரது தந்தையிடம் ஒப்படைத்தனர்.

     சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் ஈஞ்சார் விலக்கு அருகே உள்ள தனியார் மெட்ரிக். பள்ளியில் சிவகாசி பெரியார் காலனி நாகராஜன் மகள் பவித்ரா (8) மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கிறார்.  இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் பவித்ரா அங்கிருந்து வெளியேறி சாமிநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தாராம்.

     இதையடுத்து, அங்கிருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த மல்லி போலீஸார் சிறுமியை மீட்டு, சிவகாசியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சிறுமியிடம் விசாரித்த போது, விடுதியில் தங்கி படிக்க பிடிக்க வில்லை எனக் கூறினாராம். பின்னர் அச்சிறுமியின் தந்தை நாகராஜனை வரவழைத்து, அவரிடம் ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai