சுடச்சுட

    

    பேண்டேஜ் துணி தொழிலாளர்கள் கூலி உயர்வு வழங்க கோரிக்கை

    By ராஜபாளையம்  |   Published on : 04th June 2016 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சத்திரப்பட்டி பகுதியில் பேண்டேஜ் துணி தயாரிக்கும் விசைத்தறி தொழிலாளர்கள் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜபாளையம், சத்திரப்பட்டியில் பேண்டேஜ்  துணி உற்பத்தி தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். 350 சிறு விசைத்தறி கூடங்களில் மட்டும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதுபோக மறைமுகமாக 2 ஆயிரம் பேர் உள்ளனர்.

    ஏற்றுமதி உற்பத்தியாளர்கள், பேண்டேஜ் உற்பத்தியாளர்கள், சிறுவிசை தறி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே 3 ஆண்டுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுவது வழக்கம். 2013-இல் போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் 30-இல் முடிவடைந்து விட்டது.

    இது வரை புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. இதனால்  தொழிலாளர்கள் கூலி உயர்வு கிடைக்குமா என்ற தவிப்பில் உள்ளனர்.

    தொழிலாளர் நலத்துறையினர் இதில் தலையிட்டு, உரிமையாளர்களையும், தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைத்து புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai