சுடச்சுட

  

  பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: அரசு ஊழியர் சங்கம் கண்டனம்

  By விருதுநகர்  |   Published on : 04th June 2016 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

      அதில் கூறியிருப்பதாவது: விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமாக ரூ.9 மட்டுமே வசூலிக்க வேண்டும், ஆனால்,  ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    விருதுநகரில் இருந்து அழகாபுரி வரை செல்லும் புறநகர் பேருந்துகளில் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுவதற்கு பதிலாக ரூ.11 வசூல் செய்யப்படுகிறது. அழகாபுரியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் புறநகர் பேருந்துகளில் ரூ.10 க்கு பதிலாக ரூ.12 வசூலிக்கப்படுகிறது.

  தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத கட்டண உயர்வு விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே பின் பற்றப்படுகிறது.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை தடுத்து நிறுத்த மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai