சுடச்சுட

  

  மாயூரநாதசுவாமி கோயில் பகுதிகளில் தெரு விளக்கு வசதி செய்து தரக் கோரிக்கை

  By ராஜபாளையம்  |   Published on : 04th June 2016 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   இக்கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் மதுரை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, நடந்து வருகின்றனர். இந்த சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், இந்த சாலையில் பல நாள்களாக தெருவிளக்குகள் எரியாததால் பக்தர்கள் இரவில் நடந்து செல்ல அச்சமடைந்துள்ளனர். இதனால் ஆவரம்பட்டி உள்பட ராஜபாளையம் நகரின் சில பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், ஊருணி, சேஷசுவாமி கோயில் வழியாக மாயூரநாதசுவாமி கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் புகழேந்தி சாலை, மதுரை சாலை வழியாக வந்தால் ஒரு கி.மீ. சுற்றி வரவேண்டும். காலவிரயத்தை தடுக்க ஊருணி பாதையை பயன்படுத்துகின்றனர்.

    இரவில் இந்த பகுதியிலும் தெருவிளக்கு வசதி இல்லை. சாலையும் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் கோயிலில் மட்டும் தான் மின்விளக்கு வசதி உள்ளது. எனவே கோயிலுக்கு செல்லும் சாலைகளில், கோயில் நிர்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ராஜபாளையம் நகர் மன்றத் தலைவர் பி.எஸ்.தனலட்சுமி செல்வசுப்பிரமணியராஜா வெள்ளிக்கிழமை தெரிவித்த போது, கோயில் பகுதியில் நான்கு மின்விளக்கு போல்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai