சுடச்சுட

  

  விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சியில் சரக்கு வாகனம் மீது செங்கல் லாரி வெள்ளிக்கிழமை மோதிய விபத்தில் ஓட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

   மதுரை மாவட்டம் பேரையூரிலிருந்து விருதுநகர் நோக்கி செங்கல் லாரியை முனீஸ்வரன் (25) வெள்ளிக்கிழமை ஓட்டி வந்தார். விருதுநகரிலிருந்து வடமலைக்குறிச்சி நோக்கி  சரக்கு வாகனத்தை அல்லம்பட்டியை சேர்ந்த மணிகண்ட சண்முகம் ஓட்டிச் சென்றார். வடமலைக் குறிச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி, சரக்கு வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே மணிகண்டசண்முகம் உயிரிழந்தார். சரக்கு வாகனத்தில் உடன் வந்த அல்லம்பட்டியை சேர்ந்த பணப்பாண்டி (52) மதுரை அரசு மருத்துவமனைககு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். லாரி ஓட்டுநர் முனீஸ்வரனை ஆமத்தூர் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai