சுடச்சுட

  

  சிவகாசியில் பட்டாசு கடையில் விதிமீறல் உள்ளதாக அக்கடைக்கு வெள்ளிக்கிழமை வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

  சிவகாசி மணி நகரில் ரவீந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை உள்ளது. இந்த கடையில் விதிமீறல் உள்ளதாக வருவாய்துறையினருக்கு புகார் வந்தது. இதையடுத்து தீப்பெட்டி-பட்டாசு தனி வட்டாட்சியர் முத்துலட்சுமி தலைமையில் வருவாய்த்துறையினர் அக்கடையில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, அக்கடையில் சட்டவிரோதமாக பட்டாசு க்கு தேவையான மூலப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. மேலும் அனுமதி பெற்றதை விட அதிகமாக பட்டாசு இருப்பு வைக்கப்பட்டிருந்தது.இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரனுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் கடைக்கு, சிவகாசி வட்டாட்சியர் பாஸ்கரன் சீல் வைத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai