சுடச்சுட

  

  வீடுகளை அகற்ற முயற்சிப்பதாக நகராட்சி அலுவலகம் முற்றுகை

  By விருதுநகர்  |   Published on : 04th June 2016 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் பாத்திமா நகரில் வீடுகளை இடிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

  விருதுநகரில் கெளசிகா ஆற்றை ரூ.3.25 கோடி செலவில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஆற்றின் கரைகளை இருபுறமும் அளவீடு செய்து உயர்த்தப் போவதாக பொதுப்பணித்துறை அறிவித்தது.

  ஆற்றின் வடக்குக் கரையில் நகராட்சிப் பகுதியில் மட்டும் தலைமை நில அளவையாளர் மூலம் அளவீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

   தென் பகுதியில் உள்ள பாவாலி, கூரைக்குண்டு ஊராட்சி பகுதியில் அளக்கவில்லையாம். நகராட்சிப் பகுதியில் சில குடியிருப்புகளை இடிக்கும் நோக்கில் வீட்டின் சுவற்றில் கருப்பு நிறத்தில் அம்புக் குறியிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

  அந்தக் குடியிருப்புகளுக்கு முறையான பட்டா மற்றும் பத்திரங்கள் உள்ளதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

  இந்நிலையில், குறியீடு போட்ட இடங்களில் கற்களை ஊன்றும் பணியில் பொதுப் பணித்துறையினர் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

  இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் முருகன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அவர்கள் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள புகாரில் கூறியிருப்பதாவது: நகராட்சி, ஊராட்சி, மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் வந்து கெளசிகா ஆற்றை அளக்க வேண்டும். தென்கரையில் தனியார் மனைகள் மற்றும் டிரஸ்ட்கள் ஏராளமாக ஆக்கிரமித்துள்ளன.

  அதை அகற்ற நடவடிக்கை எடுக்காமால், பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழை மக்கள் வீடுகளை இடிக்க முயற்சி செய்வதை நிறுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai