Enable Javscript for better performance
ஸ்ரீராமலிங்க செளடாம்பிகையம்மன் வைகாசித் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீராமலிங்க செளடாம்பிகையம்மன் வைகாசித் திருவிழா

    By அருப்புக்கோட்டை  |   Published on : 04th June 2016 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வைகாசித் திருவிழாவின் நிறைவு நாளான வியாழக்கிழமை இரவு அருப்புக்கோட்டையில் ஸ்ரீராமலிங்க செளடாம்பிகை அம்மன் காளை வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.

    அருப்புக்கோட்டை தெற்குத்தெரு ஸ்ரீராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலில் வைகாசித் திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு, செவ்வாய்க்கிழமை மாலை அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியிலுள்ள ஸ்ரீவாழவந்தம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்தபின் சக்தி கரகம் ஸ்ரீராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் தனிப்பந்தலினகீழ் அம்மனை எழுந்தருளச்செய்தனர். விரதம் இருந்த பக்தர்கள் கத்தியால் நெஞ்சு மற்றும் முதுகுப்பகுதிகளில் கீறிக்கொண்டு வழிபாடு செய்தனர்.

    விழாவின் தொடர்ச்சியாக வியாழக்கிழமை இரவு அம்மனுக்கு முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீராமலிங்க செளடாம்பிகையம்மன் திருவீதி உலா நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காளை வாகனத்தில் அம்பிகை வீதி உலா வந்தார்.

    இளைஞர்கள் சிலம்பாட்டம், வாள் சண்டை, தீப்பந்த சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட வீர விளையாட்டுக்களுடன் அம்மன் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai