Enable Javscript for better performance
ஒன்றிய அலுவலக ஊழியரிடம் 5 பவுன் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் அருகே சனிக்கிழமை ஒன்றிய அலுவலக ஊழியரிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

     விருதுநகர் அருகே உள்ள செவல்பட்டி மாடர்ன் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி புஷ்பகலா (47). இவர் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக உள்ளார். இந்நிலையில், இவர் செங்குன்றாபுரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது, எல்கைப்பட்டி அருகே சென்ற போது, பின் தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், அவரை கீழே தள்ளி அவர் அணிந்திருந்த 5.5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதில் காயமடைந்த புஷ்பகலா விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

     இது குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai