சுடச்சுட

  

  சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரிக்கு  "பி' தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

   குஜராத் மாநிலம் ஹேமச்சந்திரச்சாரிய வடக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் தலைமையிலான தேசிய தர நிர்ணய குழுவினர் (நாக்) கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர். கல்லூரியின் உள்கட்டமைப்பு, மாணவர்களுக்கு பாடம் கற்பித்தல் முறை, ஆய்வுகூடங்கள், தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.

       அதன் அடிப்படையில் கல்லூரிக்கு "பி" தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழை கல்லூரி முதல்வர் ஏ.பி.செல்வக்குமார், கல்லூரித் தாளாளர் ஜி.அசோகனிடம் சமர்பித்தார். கல்லூரி முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai