தீக்குளித்து பெண் தற்கொலை
By ராஜபாளையம் | Published on : 05th June 2016 01:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ராஜபாளையத்தில் சனிக்கிழமை குடும்பப் பிரச்னையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம் வடக்குமலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் மதுகுடித்து விட்டு அடிக்கடி இவரது மனைவி சித்ராதேவியிடம் தகராறு செய்வாராம். இதனால் மனமுடைந்த சித்ராதேவி வெள்ளிக்கிழமை அருகில் உள்ள அவரது தாய் வீட்டுக்குச் சென்று தீக்குளித்தார். பலத்த தீக்காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.