சுடச்சுட

  

  பட்டாசுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு

  By சிவகாசி  |   Published on : 05th June 2016 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பேர்மென்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

   இது குறித்து தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க இணை இயக்குநர் கோ.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் போர்மென்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் இப்பணிகளுக்கு இணையான நிலையில் உள்ள பணியாளர்களுக்கு பாதுகாப்பாக பணிபுரிவது குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேற்கண்ட பணியாளர்களில் ஆலைக்கு ஒருவர் அல்லது இருவரை ஆலை நிர்வாகங்கள் பயிற்சிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

    சிவகாசி ஆனையூர் ஊராட்சியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் அருகே கட்டப்பட்டுள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படும். இதுகுறித்த விபரங்களுக்கு 9445869277 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai