சுடச்சுட

  

  ராஜபாளையம் பகுதி நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்க கோரிக்கை

  By ராஜபாளையம்  |   Published on : 05th June 2016 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜபாளையம் பகுதியில் உள்ள அண்ணா நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

   தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நூலகம் அமைப்பதற்காக, கடந்த 2009இல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி நூலகத் திட்டத்தை கொண்டு வந்தார். இதன்படி ராஜபாளையம் பகுதியில் உள்ள 36 ஊராட்சிகளிலும் சொந்த கட்டடங்கள் கட்டப்பட்டு, அதற்கு தேவையான புத்தகங்களை வழங்கி நூலகங்கள் திறக்கப்பட்டன.

   இதில் பணியாற்ற பகுதி நேரமாக ஓய்வுபெற்ற ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாதம் ரூ.750 சம்பளம் வழங்கப்பட்டது. கிராமப்புற மாணவர்களுக்கு இத்திட்டம் பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இதையடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, நூலக ஊழியர்களுக்கு ரூ.1500 சம்பளம் நிர்ணயம் செய்தது. ஆனால் நூலகத்துக்கு தேவையான புதிய புத்தகங்கள் எதுவும் வழங்கப்பட வில்லை என்ற புகார் எழுந்துள்ளது. எனவே நூலகங்களுக்கு புதிய புத்தகங்களை வழங்க அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai