சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி கவிழ்ந்து கிளீனர் சாவு

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 05th June 2016 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை இரவு லாரி கவிழ்ந்ததில், கிளீனர் உயிரிழந்தார். லாரி ஒட்டுநர் பலத்த காயமடைந்தார்.

      திருநெல்வேலி மாவட்டம் தென்காசியிலிருந்து உரிக்காத தேங்காய்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நோக்கி சென்று கொண்டிருந்தது.

       லாரியை வி.கே.புதூரைச் சேர்ந்த சேதுபதி (26) ஓட்டினார். கிளீனராக வி.கே.புதூர் குமரன் மகன் மனோஜ் (24) இருந்துள்ளார்.

      ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மடவார் வளாகம் என்ற இடத்தில் வளைவான பகுதியில் லாரி நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் கிளீனர் மனோஜ் உயிரிழந்தார். ஓட்டுநர் சேதுபதி பலத்த காயம் அடைந்தார்.

     ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ரா.வேணுகோபால், காவல் ஆய்வாளர் ஜே.மகேஸ்குமார் ஆகியோர் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த ஓட்டுநர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai