சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தலில் புதிய கூட்டணி இல்லை: இல.கணேசன்

  By சிவகாசி  |   Published on : 06th June 2016 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உள்ளாட்சித் தேர்தலில் புதிதாக யாரையும் கூட்டணி சேர்க்க மாட்டோம் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.

  பாஜக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மற்றும் பிரதமர் நரேந்திரமோடி அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஞாயிற்றுக்கிழமை சிவகாசி வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

  வரும் 24,25 தேதிகளில் பழனியில் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. கட்சியின் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. அதில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உள்ளாட்சித் தேர்தலில் புதிதாக யாரையும் கூட்டணி சேர்க்க மாட்டோம். 2011 தேர்தலைவிட இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றுள்ளோம். எனவே உள்ளாட்சித் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்,சீனபட்டாசுகளால் சிவகாசி பட்டாசுத் தொழில் பாதிக்கப்படுவதாக இங்குள்ள தொழிலதிபர்கள் மனு அளித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன் இதுகுறித்து பல நடவடிக்கைகளை எடுத்து வருவதால் சீனப் பட்டாசுகள் இறக்குமதி தடுக்கப்பட்டுள்ளது. சீனப்பட்டாசு இந்தியாவில் நுழைய மத்திய அரசு அனுமதிக்காது. சிவகாசி பட்டாசுத் தொழிலை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர். பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai