சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு மாவட்ட அளவிலான கலந்தாய்வு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள், தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதில் மாணவர் சேர்க்கை மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, இணையதளம் மூலம் ஜூன் 20-க்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 ஆகும். 8 ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். தொழிற்பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும். மேலும், மிதிவண்டி, மடிக்கணினி, சீருடைகள், இலவச பாடப் புத்தகங்கள் ஆகியவையும் வழங்கப்படும். கலந்தாய்வு மூலம் சுயநிதி ஐடிஐகளில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணத்தை அரசே செலுத்தும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai