சுடச்சுட

    

    சிவகாசி கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்

    By சிவகாசி  |   Published on : 06th June 2016 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசி அருள்மிகு விஸ்வநாதசுவாமி-விசாலாட்சியமன் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி சனிக்கிழமை அங்குரார்பணம் நடைபெற்றது. பின்னர் இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலா நடைபெற்றது. தொடந்து ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் கொடியேற்றப்பட்டு, கொடிமரத்திற்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் விஸ்வநாதர்-விசாலாட்சியம்மன் மற்றும் பிரியாவிடை ஆகியோர் ஊஞ்சலில் அருள்பாலித்தனர். கொடியேற்ற நிகழ்ச்சியை சி.தங்கராஜ் குருக்கள் மற்றும் சுப்பிரமணியசாமி பட்டர் ஆகியோர் நடத்தினர்.  நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் இரா.முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா வினையொட்டி தினமும் காலை மற்றும் இரவு சுவாமி வீதி உலா நடைபெறும். ஜூன் 13ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai