Enable Javscript for better performance
ராஜபாளையம் பஞ்சு கிட்டங்கிகளில் தீ விபத்து- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் பஞ்சு கிட்டங்கிகளில் தீ விபத்து

    By ராஜபாளையம்  |   Published on : 06th June 2016 06:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சனிக்கிழமை இரு வேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகளில் பஞ்சு, மெத்தைகள் மற்றும் தார்ப்பாய்கள் எரிந்து சேதமாகின.

    ராஜபாளையம் அருகே படிக்காசு வைத்தான் பட்டியில் தனியாருக்கு சொந்தமான கழிவு பஞ்சுகளை அரைக்கும் உள்ளது. சுற்றுப்பகுதிகளில் உள்ள பஞ்சாலைகளில் இருந்து பெறப்படும் கழிவு பஞ்சுகளை இங்கு அரைத்து மறுசுழற்சி செய்து, மலிவு விலை மெத்தை, தலையணை தயாரிப்பாளர்களுக்கு அனுப்புவார்கள். இங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பஞ்சுப் பொதிகள் நெருக்கமாக தேக்கி வைக்கப் பட்டிருந்ததால் அறை முழுவதும் நெருப்பு பரவியது. ராஜபாளையம் தீயணைப்புத் துறையினர் வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

    மற்றொரு விபத்து: ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ஆதீஸ்வரன் என்பவர் பஞ்சு பொதிகளை வாங்கி மலிவு விலை மெத்தை மற்றும் தலையணையை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

     இதற்காக அவரது வீட்டின் அருகில் பஞ்சுப் பொதிகள், உற்பத்தி செய்த மெத்தைகள் மற்றும் தலையணைகளை அடுக்கி வைத்து, பாதுகாப்புக்காக அதன் மீது தார்பாய்கள் கொண்டு மூடி வைத்திருந்தார்.அந்த பொதிகளில் திடீரென தீப்பற்றியது. இதில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 56 மெத்தைகள், தலையணைகள், மூடி வைத்திருந்த தார்ப்பாய்கள் மற்றும் பஞ்சு பொதிகள் எரிந்து சேதமாகின. ராஜபாளையம் தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai