சுடச்சுட

  

  ஸ்ரீவில்லிபுத்தூரில் மீண்டும் பழைய பாதைகளிலேயே போக்குவரத்து தொடங்க நடவடிக்கை

  By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 06th June 2016 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்ரீவில்லிபுத்தூரில் மீண்டும் பழைய பாதைகளிலேயே போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.

  ஸ்ரீவில்லிபுத்தூரில் பென்னிங்டன் மார்கெட்டை ஒட்டியுள்ள சாத்தூர் சாலை பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வருவதற்கான ஒருவழிப்பாதையாக இருந்து வந்தது. மதுரை, வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகள் புறவழிச் சாலை வழியே வந்து சாத்தூர் சாலை வழியே பேருந்து நிலையத்திற்குச் செல்லும்.

  சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆத்துக்கடை இறக்கம் வழியே வந்து ராமகிருஷ்ணாபுரம் வழியே சர்ச் சந்திப்பு வழியாக பேருந்துகள் செல்லும்.

  இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன் ஒரு வழிப் பாதையான சாத்தூர் சாலை இருவழிப்பாதையாக மாற்றப்பட்டு இதன் வழியே பேருந்துகள் வருவதற்கும் போவதற்கும் உத்தரவிடப்பட்டது. இதனால் நெருக்கடி மிகுந்த மார்கெட் பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டன. பாதசாரிகள் மற்றும் சைக்கிளில் செல்வோர் மிகவும் துன்பத்திற்குள்ளாகினர்.

  மேலும் சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு ராமகிருஷ்ணாபுரத்தில் நின்று பேருந்து ஏறியவர்கள் பேருந்து நிலையம் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

  பாதை மாற்றப்பட்டதால் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு தரப்பினரும் மனு அளித்தனர்.

  இதனையடுத்து சிவகாசி சார் ஆட்சியர் அமர்குஷ்வா ஆய்வு செய்தார்.

  இந்நிலையில் சனிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. வேணுகோபால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து பழைய பாதைகளிலேயே போக்குவரத்து நடைபெற காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai