சுடச்சுட

  

  ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

  By ஜங்ஷன் - intro  |   Published on : 06th June 2016 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

  விழாவிற்கு கு.சக்திவேல், எஸ்.சிவகுருநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.செயலாளர் எஸ்.குமாரசாமி, பொருளாளர் எம்.அகமது அனாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் ஆர்.பி.ரஞ்சித் வரவேற்றார்.

  புதிய நிர்வாகிகளுக்கு அரிமா ஆளுநர் டாக்டர் எம்.வெங்கடசுப்பு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 2016-17 ம் ஆண்டிற்கு தலைவர் பி.கார்த்திக், செயலாளர் கே.அரவிந்த், பொருளாளர் எஸ்.முரளி ஆகியோர் பதவியேற்றனர். மேலும் கே.குமாரவேல், எஸ்.குணசேகரன், எல்.சாத்தப்பன், பி.ஆர்.ஸ்ரீரெங்கராஜா, டாக்டர் எஸ்.ஆர்.ஸ்ரீகுமார், எஸ்.ஆறுமுகம், ஏ.ரவீந்திரன், எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.முனியாண்டி, எம்.குலாம் அகமது சேட் ஆகியோர் இயக்குநர்களாக பொறுப்பேற்றனர்.

  பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திரு.வி.க. தொடக்கப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிக்கு பல்வேறு உதவிகள், ஏழை மாணவர்கள் கல்வியைத் தொடர கல்வி உதவித் தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் எம்.கே.முகமது மைதீன், வி.விஜய் மெர்ச்சென்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai