சுடச்சுட

    

    அறுவடைக்குத் தயாரான மக்காச்சோளம் காட்டு பன்றிகளால் சேதம்

    By ராஜபாளையம்  |   Published on : 07th June 2016 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே புதியாதிக்குளம் கண்மாய் பகுதியில் எம்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கு வயல் உள்ளது. இங்கு ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார்.

      கதிர் விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டுப்பன்றிகள் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை ஒடித்து கதிர்களைத் தின்று சென்றன.

      பாதிக்கப்பட்ட திருநாவுக்கரசு ராஜபாளையம் வனத்துறை அதிகாரிகளிடமும், வருவாய்துறை அதிகாரிகளிடமும் திங்கள்கிழமை புகார் செய்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai