சுடச்சுட

    

    குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

    By விருதுநகர்  |   Published on : 07th June 2016 06:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வத்திராயிருப்பு அருகே கண்ணக்குடும்பன்பட்டியில் குடிநீர் வழங்குவதில் குளறுபடி நிலவுவதா மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமனிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கண்ணக்குடும்பன்பட்டியில் 200 க்கும மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நாங்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் வழங்குவதில்லை. எனவே, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். 

    திருவிழா தடையை விலக்கக் கோரி மனு: சேசபுரம், மீனாட்சிபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சேசபுரம், மீனாட்சிபுரத்தில் 190 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க சந்தன மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கிராமத்தில் 5 சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறோம்.

    கடந்த 2006-இல் ஏற்பட்ட சிறு பிரச்னையால் திருவிழா தடைபட்டது. இது தொடர்பான வழக்கில் திருவிழா நடத்துவதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்து விட்டது. ஆனாலும், கோயில் திருவிழா நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, அனைத்து பொதுமக்களும் சுவாமி தரிசனம் செய்து திருவிழா நடத்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai