Enable Javscript for better performance
சட்டப்பேரவை உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சட்டப்பேரவை உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு

    By சாத்தூர்  |   Published on : 07th June 2016 06:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்து ஊர்வலமாகச் சென்றார். தெற்கு ஆனைக்கூட்டம், வெற்றிலையூரணி, சல்வார்பட்டி, சுப்பிரமணியபுரம், இறவார்பட்டி, கோட்டையூர், தாயில்பட்டி, கீழத்தாயில்பட்டி, கலைஞர் காலனி, மேலஒட்டம்பட்டி உள்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று நன்றி தெரிவித்தார். வீடுவீடாக ஆரத்தி எடுத்து கிராம மக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். கிராமங்களில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் சாத்தூர் ஒன்றியச் செயலர் சண்முகக்கனி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் ரேவதி காசித்துரைப் பாண்டியன், தொகுதி இணைச் செயலர் முனீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai