Enable Javscript for better performance
சிவகாசியில் பாஜக பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதி பாஜக சார்பில், வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மற்றும் பிரதமர் நரேந்திரமோடி அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்ம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

    சிவகாசி- திருத்தங்கல் சாலையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.பார்த்தசாரதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் என்.எஸ்.தங்கராஜ், பொருளாளர் ஜெ.ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.சீனிவாசகன், மாநில செயற்குழு உறுப்பினர்(தொழில்பிரிவு) எஸ்.சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     நகரத்தலைவர் பி.பழனிச்சாமி வரவேற்றார். கோட்டப் பொறுப்பாளர் எஸ்.அழகர்சாமி, மாவட்டத் தலைவர் ஜி.டி.சோலையப்பன் உள்ளிட்டோர் பேசினர்.

    கூட்டத்தில், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் சிறப்புரையாற்றியது: நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் வைப்புத் தொகையை இழந்தார். ஆனால் எங்கள் வேட்பாளர்கள் 2011 தேர்தலை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளனர். எனவே எங்கள் கட்சிக்கு இது தோல்வியாகாது.

    மத்தியில் மோடியின் ஆட்சியை தமிழக மக்கள் அங்கீகரித்துள்ளனர். கடந்த இரு ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியாவை அவர் உயர்த்தியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவிற்கு பெருமளவு கொண்டு வந்துள்ளார். இளைஞர்கள் மோடியின் ஆட்சியை விரும்புகிறார்கள் என்றார். நகர வர்த்தக பிரிவுத் தலைவர் சி.செல்வம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai