சுடச்சுட

  

  திருமண உதவி தொகை கோரி ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி மனு

  By விருதுநகர்  |   Published on : 07th June 2016 06:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகாசி வட்டம் தாயில்பட்டி அருகேயுள்ள கட்டணஞ் செவல் பகுதியை சேர்ந்தவர் திருமலை குமார். மாற்றுத்திறனாளியான இவர் மாற்றுத்திறனாளியான தனது மனைவியுடன் வந்து திங்கள்கிழமை ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: 20.8.2012 இல் எங்களுக்குத் திருமணம் நடைபெற்றது. அரசு திருமண உதவித் தொகை பெற மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. மாற்றுத்திறனாளியான நாங்கள் அடிக்கடி அலுவலகம் வந்து அலைகின்றோம்.

  மேலும் தொழில் தொடங்க கடன் கேட்டு கூட்டுறவு வங்கியில் விண்ணப்பித்திருந்தேன்.

   இதுவரை எந்த பதிலும் இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம் கோரிய மனுவையும் அதிகாரிகள் தள்ளுபடி செய்து விட்டனர். எனவே, மாற்றுத்திறனாளியான எங்களுக்கு திருமண உதவித் தொகை, வங்கி கடன், மூன்று சக்கர வாகனம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai