சுடச்சுட

    

    போதைப் பாக்குகள் விற்பனையை தடுக்கக் கோரிக்கை

    By அருப்புக்கோட்டை  |   Published on : 07th June 2016 06:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பஞ்சாலைகள் பல உள்ளன. இங்கு பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பான்பராக் உள்ளிட்ட போதைப் பாக்குகளை விரும்பி பயன்படுத்துகின்றனர். இதனால் இப்பகுதியில் போதை பாக்குகள் தடையின்றி விற்பனையாகின்றன. நகருக்குள் உள்ள பல பெட்டிக் கடைகள், டீக்கடைகளில் இந்த பாக்குகள் விற்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்தப் பாக்குகளை வாங்கி உபயோகிக்கும் நிலை உள்ளதால் உடனடியாக போதை பாக்குகள் விற்பனையை தடுக்க வேண்டும் என பொது நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai