சுடச்சுட

    

    மீன் சந்தை கட்டணத்தை நகராட்சியே வசூல் செய்யக் கோரிக்கை

    By விருதுநகர்  |   Published on : 07th June 2016 06:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் நகராட்சி மீன் சந்தையில் நகராட்சியே கட்டணம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

        அந்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் நகராட்சி மீன் சந்தையில் கடந்த 40 ஆண்டுகளாக மீன் வியாபாரம் செய்து வருகிறோம். இச்சந்தை ஒவ்வொரு ஆண்டும் நகராட்சி சார்பில் ஏலம் விடப்படுகிறது. குத்தகைதாரர்கள் அரசு நிர்ணயம் செய்ததை விட பல மடங்கு அதிகம் வசூல் செய்கின்றனர். அதனால், வியாபாரிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

      கடந்த ஜனவரி முதல் தற்போது வரை நகராட்சியே நேரடியாக நிர்ணயித்த கட்டணத்தை வசூலித்து வருகிறது. இந்நிலையில் நகராட்சி சார்பில் ஜூன் 16 இல் மீன் சந்தை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிப்பதுடன், ரௌடிகளின் அராஜகமும் ஏற்படும் நிலை உள்ளது.

     எனவே மாவட்ட ஆட்சியர் இந்த ஏலத்தினை ரத்து செய்து நகராட்சியே தொடர்ந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai