சுடச்சுட

    

    வரதட்சணை கேட்டு தொந்தரவு: கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

    By விருதுநகர்  |   Published on : 07th June 2016 06:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காதல் திருமணம் செய்த மனைவியிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவர் உட்பட அவரது குடும்பத்தார் மீது போலீஸார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

     விருதுநகர் என்.ஜி.ஓ, காலனியை சேர்ந்தவர் மதிவாணன்(32). இவரும் ஜெயம் மரகதஜோதி(26) என்பவரும் கடந்த 2011-இல் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

     திருமணத்தின்போது ஜெயம் மரகதஜோதி 20 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருள்களை வழங்கினாராம். இந்நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ. 20 லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு துன்புறுத்தினராம். இதையடுத்து அவர், ரூ.2 லட்சம் வழங்கினாராம்.

    இந்நிலையில் மதிவாணன், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தாராம். இதையடுத்து ஜெயம் மரகதஜோதி, விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

         அதன்பேரில், மதிவாணன், அவரது பெற்றோர் ராஜேந்திரன்(65), காளீஸ்வரி(55), உறவினர்கள் கவிதா, பாஸ்கரன் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai